• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

KP by KP
2026/10/04
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

திலீபனின் சிலையை முன்வைத்து மீண்டும் இரண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் மோதிக் கொள்கின்றன.வழமையாக திலீபனின் நினைவு நாளுக்கு முன்பு அல்லது நினைவு நாளின் போது முரண்பாடுகள் வெடித்தெழுவதுண்டு. இந்த முறை  வித்தியாசமாக நினைவு நாள் முடிந்த பின் முரண்பாடு மேற்கிளம்பியிருக்கிறது.

திலீபனின் நாளை வைத்து கட்சிகள் அதிகமாக மோதிக் கொள்வதற்கு காரணம் என்ன? ஏனென்றால் திலீபன் அஹிம்சை வழியில் உயிர் துறந்தவர். அதனால் அவருடைய மரணத்தை நினைவு கூர்வதற்குச் சட்டத்தடைகள் குறைவாக இருக்கும் என்று கருதுவது ஒரு காரணம்.அவர் ஆயுதப் போராட்ட மரபில் வந்தவராக இருந்தாலும் அவருடைய உயிரிழப்பு அகிம்சை வழியில் நிகழ்ந்தது. அதனால் அவரை அகிம்சை போராட்டத்தில் உயிர் துறந்தவர் என்று கூறி நினைவு கூரும்போது அதற்குச் சட்ட ரீதியாக வரக்கூடிய தடைகள் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு.

இரண்டாவது காரணம்,திலீபன் உயிரிழந்த விதம் உணர்ச்சிகரமானது.அந்த 12 நாட்களும் உணர்ச்சிப் பெருக்கானவை.எனவே ஒப்பீட்டுளவில் அதிகம் உணர்ச்சிகரமான ஒரு நினைவு கூர்தலாக அது காணப்படுகிறது.அவர் படிப்படியாக உலர்ந்து,உயிர் துறந்த நாளை நோக்கிப் படிப்படியாக உணர்ச்சிப் பெருக்குக் கட்டி எழுப்பப்படும் என்பதனாலும் அந்த நினைவு நாட்களுக்கு ஒரு விசேஷ தன்மை உண்டு.

மூன்றாவது,அந்த நினைவிடம் அமைந்திருக்கும் இடம். அது யாழ்ப்பாணத்தின் சைவத் தமிழ்ப் பண்பாட்டின் இதயம் என்று வர்ணிக்கப்படுகின்ற நல்லூர் முருகன் ஆலயச் சூழலில் காணப்படுகிறது.அருகே ரியோ கிரீம் ஹவுஸ் உண்டு.இரண்டுமே வடக்கு நோக்கி வருகை தரும் சிங்கள யாத்திரிகர்களுடைய பயண வழித்தடத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இடங்கள். தவிர,யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்கள்,வெளி இனத்தவர்கள் அநேகமாக அங்கே வருவார்கள்.இவ்வாறாக வடபகுதி சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தின் இதயமான ஒர் இடத்தில் திலீபனின் நினைவிடம் அமைந்திருப்பதனால் அதற்கு ஓர் இட முக்கியத்துவமும் உண்டு.

மேற்கண்ட காரணங்களினால் திலீபனின் நினைவு நாளானது ஏனைய நாட்களோடு ஒப்பிடுகையில் விசேஷமானதாகக் காணப்படுகிறது. அதனால் அந்த நினைவு நாளுக்கு தமிழ்த் தேசிய அரசியலில் உணர்வுபூர்வமான முக்கியத்துவம் உண்டு. அந்த முக்கியத்துவம் தெரிந்தபடியால்தான் அமைச்சர் சந்திரசேகரனும் மற்றொரு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஆண்டு திலீபனின் இடத்துக்குப் போனார்கள்.

இந்த முக்கியத்துவம் காரணமாகத்தான் திலீபனின் நினைவு நாட்களுக்கு யார் பொறுப்பு?திலீபனின் நினைவு நாட்களை யார் நிர்வகிப்பது? திலீபனின் நினைவுக் குழுவுக்குள் யார் யார் உண்டு? திலீபனின் நினைவுச் சிலையை யார் கொண்டு போய் வைப்பது? எப்படி வைப்பது? போன்ற எல்லா விடயங்களிலும் ஒருவித போட்டித் தன்மை நிலவுகிறது.

இந்தப் போட்டி காரணமாகத்தான் கடந்த 17 ஆண்டுகளாக திலீபனின் நினைவிடத்தை முன்வைத்து ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு மோதல் ஏற்படுகிறது.ஏதோ ஒரு முரண்பாடு தோன்றுகிறது.சிலசமயம் அந்த முரண்பாடுகள் ஊடகச் சந்திப்புகள்வரை போகின்றன.

ஆனால் வழமையாக நினைவு கூர்வதற்கு முன்னரோ அல்லது நினைவு கூரும் நாட்களிலோ நடக்கும் மோதல்கள் இம்முறை நினைவு கூர்ந்து முடிந்த பின் நடந்திருக்கின்றன.ஏனென்றால் வைக்கப்பட்ட சிலையை நினைவு நாள் முடியும் வரையிலும் தூக்குவதற்கு போலீஸோ அரசாங்கமோ தயாராக இருக்கவில்லை. நினைவு நாட்களின் மத்தியில் அதைத் தூக்கினால் மக்களிடமிருந்து உணர்ச்சிகரமான எதிர்ப்பு வரும்.அதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் விரும்பியிருக்கலாம்.

சிலையை வைத்த ஏற்பாட்டுக் குழுவொ அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களோ அது வெண்கலச் சிலை என்று எங்கேயும் கூறியிருக்கவில்லை.வெண்கலத்தால் அப்படி ஒர் இடுப்பளவு சிலையைச் செய்வதற்கு பல லட்சங்கள் தேவை.வெண்கலச் சிலையைச் செய்யப் போவதாகக் கூறி யாரிடமும் நிதி திரட்டப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அவை.

அதேசமயம்,சிலை தூக்கப்பட்டதில் தமிழரசுக் கட்சிக்கும் பங்கு உண்டு என்பது போல ஒரு குற்றச்சாட்டு உருவாக்கப்படுகிறது.அது தமிழரசுக் கட்சியை இந்த விடயத்தில் குற்றவாளியாக்கும் நோக்கத்தைக் கொண்ட ஒரு குற்றச்சாட்டு. தமிழரசுக் கட்சியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைபபோல இந்த விடயத்தைத் தீவிரமாகவும் உணர்வு ஈடுபாட்டோடும் விசுவாசமாகவும் அணுகவில்லை என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.ஆனால் தமிழரசுக் கட்சிதான் சிலையைத் தூக்குவித்தது என்ற பொருள்பட குற்றஞ்சாட்ட முடியாது.

இதில் யார் கூடுதலாகத் துணிச்சலாகச் செயற்பட்டிருக்கிறார்கள் அல்லது யார் சட்டத்துக்குப் பயந்து பின்வாங்கியிருக்கிறார்கள் போன்ற விடயங்களைப் பின்னர் விவாதித்துக் கொள்ளலாம்.இங்கே முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால்,திலீபனின் சிலை ஒன்றை அங்கே வைப்பதற்கு,அதை வைத்து நினைவு கூர்வதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டா? இல்லையா? என்பதுதான்.

இது நினைவு கூர்தலுக்கான ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமையோடு; அரசியல் உரிமையோடு தொடர்புடைய விடயம். தமிழ் மக்கள் தங்களுடைய கூட்டு உரிமையைக் கேட்டுப் போராடும் ஒரு சிறிய தேசிய இனம்.எனவே இந்த விடயத்தில் கூட்டு உரிமைக்கான போராட்டம் எனப்படுவது கட்சிகளைக் கடந்து,வேறுபாடுகளைக் கடந்து,அக முரண்பாடுகளைக் கடந்து ஒன்று திரண்ட பெருந் திரள்போராட்டமாக அமைய வேண்டும்.ஆனால் இப்பொழுது நல்லூரில் நடந்து கொண்டிருப்பது அத்தகையது அல்ல.

அங்கே கட்சிசாரா சிவில் அமைப்புகள் மற்றும் மத குருக்கள் காணப்படுகிறார்கள்.ஆனால் கட்சி சார்ந்து தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களை அங்கே காணமுடியவில்லை.

கடந்த 17 ஆண்டுகளாக திரும்பத்திரும்ப திலீபனின் நினைவு நாளிலும் திலீபனின் நினைவுச் சின்னத்தைச் சூழ்ந்தும் முரண்பாடுகளை உற்பத்தி செய்வது,அல்லது முரண்பாடுகளைப் பெருப்பிப்பது ஒரு வழமையாக மாறிவிட்டது.அது திலீபனின் மகிமையைக் குறைக்கிறது என்று இந்தக் கட்சிகளுக்குத் தோன்றவில்லையா? இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியை குற்றஞ் சாட்டுவதல்ல இங்கு முக்கியம்.நினைவு கூர்தலுக்கான தமிழ் மக்களின் கூட்டு உரிமைக்கான ஒரு போராட்டத்தில் எப்படி ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பெரும் திரளாகப் போராடுவதுஎன்பதுதான் இங்கு முக்கியம்.

17 ஆண்டுகளின் பின்னரும் தமிழ் மக்களுக்கு நினைவு கூர்வதற்கான உரிமை முழுமையாகக் கிடைக்கவில்லை.17 ஆண்டுகளின் பின்னரும் நினைவு கூர்தல் எனப்படுவது ஒரு சட்டப் பிரச்சினையாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. குறிப்பாக,கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட இந்த நிலைமை மாறவில்லை.இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேவிபி சுதந்திரமாக நினைவு நாட்களை அனுஷ்டித்து வருகிறது.ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பகுதி நினைவு நாட்களும் நினைவுச் சின்னங்களும் நினைவுப் பாடல்களும் நினைவுப் படங்களும் தொடர்ந்து சட்டரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகின்றன.

இது எதைக் காட்டுகிறது? கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் இரண்டு வகை நினைவுகள் உண்டு என்பதைத்தான்.ஒருவகை நினைவுகள் அனுஷ்டிக்கப்படக் கூடியவை.இன்னொருவகை நினைவுகள் அனுஷ்டிக்கப்பட முடியாதவை.அல்லது வரையறைக்குட்பட்டு அனுஷ்டிக்கப்பட வேண்டியவை. 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆனால் நாட்டில் இப்பொழுதும் இரண்டு வேறு நினைவுகள் உண்டு.யுத்தத்தில் வென்றவர்கள் தங்கள் நினைவுகளை பிரமாண்டமான சின்னங்களை நிறுவிக் கொண்டாடுகிறார்கள்.கண்டி வீதி நெடுக பிரம்மாண்டமான யுத்த வெற்றி நினைவுச் சின்னங்கள் உண்டு.ஆனால் பாதிக்கப்பட்ட மக்களோ தங்கள் நினைவுகளை வெளிப்படையாகவும் சிலைகளை வைத்தும் அனுஷ்டிக்க முடியாமல் இருக்கிறார்கள்.இவ்வாறு இரண்டு வேறு நினைவுகளைக் கொண்ட ஒரு நாட்டில்தான் இனவாதம் இல்லை என்று அரசாங்கம் கூறிக்கொள்கிறது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும், ஆட்சியில் இருப்பது யாராக இருந்தாலும்,தமிழ் மக்களின் ஒரு பகுதி நினைவுகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதுதான் இலங்கைத் தீவின் இன அரசியல் யதார்த்தம் ஆகும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

Next Post

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

Related Posts

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!
இலங்கை

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

2026-10-04
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
இலங்கை

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

2026-10-04
அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!
இலங்கை

அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!

2026-10-04
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

2026-10-04
மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!
சினிமா

மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

2026-10-04
இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 61% அதிகரிப்பு!
இலங்கை

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 61% அதிகரிப்பு!

2026-10-04
Next Post
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

0
தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

0
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

0
அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!

அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

0
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

2026-10-04
தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

2026-10-04
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

2026-10-04
அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!

அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!

2026-10-04
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

2026-10-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: