சிறிலிய சவியா கணக்கு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ஷவை, இமாதம் 16ஆம் தேதி வரை மேலும் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரின் மேலதிக மருத்துவ அறிக்கைகளை அன்றே வரவழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அதுவரை ஜாமீன் தொடர்பான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்













