திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும்இரவில் வாகன சேவை நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும் தேவியர்களுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்….
அவ்வகையில் நான்காம் நாளான இன்று காலையில் கற்பகவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. …
அலங்கரிக்கப்பட்ட கற்பகவிருட்ச வாகனத்தில், பகாசுரனை வதம் செய்த திருக்கோலத்தில் தாயார்களுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த… ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர். சிலர் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்….
அத்துடன் வாகன ஊர்வலத்தின்போது கோவில் யானைகள் முன்செல்ல, மங்கல இசை, பஜனைகள், கோலாட்டம் மற்றும் திவ்யப் பிரபந்த பார.பாராயணம் ஆகியவை இடம்பெற்றன….

















