போபாலிலிருந்து ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கோட்டா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர்.
அந்தப் பேருந்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 21 பயணிகள் இந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த தகவல்களின்படி, வாகன சாரதி கட்டுப்பாட்டை இழந்தமையினால் பேருந்து, அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததால் இந்த உயிரிழப்பு விபத்து நேரிட்டுள்ளது.
இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோட்டா மாவட்ட ஆட்சியர் பியூஷ் சமாரியா கூறுகையில், காயமடைந்த அனைவரும் எம்பிஎஸ் (MBS) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், எட்டு பேர் உயிரிழந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.


















