ஸ்டோர்மொன்ட் Stormont நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையில், பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தும் இணையத்தளங்கள் மனிதக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றக் கும்பல்கள் பெண்களின் பெயர்களில் போலியான சுயவிவரங்களை உருவாக்கி, அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களில் 95 சதவீதமானோர் பாலியல் சுரண்டல் நோக்கத்துடன் கொண்டுவரப்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதனையடுத்து, இத்தகைய இணையத்தளங்களுக்குத் தடை விதிப்பதுடன், அவற்றை நடத்தி இலாபம் ஈட்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
















