• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்புத் துறைமுகத்தில் 280 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தளவாட மையத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்தமைக்கான காரணங்களில், துறைமுக வளாகத்தில் 10 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்வது தொடர்பான உடன்படிக்கை குறித்த கரிசனைகளும் அடங்குவதாக துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கொள்கலன் முனையங்களுக்கு இடையில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணியை சீன தளவாட நிறுவனமொன்றுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பில் குறித்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்ட முதலீட்டுக்கு அரசாங்கம் ஆதரவளித்த போதிலும், அதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் தொடர்பில் கரிசனைகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் பதவியேற்ற பின்னர், குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு வசதிகளை ஏற்படுத்துவதற்காகத் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்ததாகவும், நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அழைத்து வந்து கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்த முதலீட்டுக்கு நாம் ஆதரவளிப்பதையும் தெளிவுபடுத்தினோம். எனினும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால், ஏற்கனவே உள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் திட்டத்தைத் தொடர முடியவில்லை” என அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் நிராகரித்தார்.

சர்ச்சைக்குரிய உடன்படிக்கைகளின் அடிப்படையில் முதலீடுகளை முன்னெடுப்பது, எதிர்காலத்தில் நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களை ஊக்கமிழக்கச் செய்யக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், கொழும்புத் துறைமுகத்தில் முன்மொழியப்பட்ட 280 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தளவாட மையத் திட்டத்தைத் தொடரப்போவதில்லை என இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னதாக அறிவித்திருந்தது.

2023ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையம் (South Asia Commercial and Logistics Hub – SACLH) என்ற கூட்டு முயற்சியின் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

இதில், சீனாவின் China Merchants Port Holdings Company Limited நிறுவனம் 70 சதவீத பங்குகளையும், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் Access Engineering PLC ஆகிய நிறுவனங்கள் தலா 15 சதவீத பங்குகளையும் கொண்டிருந்தன.

வெளிப்புறச் சூழ்நிலைகள், வர்த்தக ரீதியான பரிசீலனைகள் மற்றும் பங்குதாரர்களின் தனிப்பட்ட நலன்கள் ஆகியவற்றை மீளாய்வு செய்த பின்னர், திட்டத்தைக் கைவிடுவதற்குப் பங்குதாரர்கள் தீர்மானித்ததாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், பங்குதாரர்கள் செலுத்திய சுமார் 29.8 மில்லியன் அமெரிக்க டொலர் மூலதனப் பங்களிப்புகளை, அவர்களின் பங்கு விகிதங்களுக்கு ஏற்ப மீளச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

எனினும், இந்த மீளளிப்பு உரிய ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் செயற்பாட்டுச் செலவுகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

இதற்கிடையில், கொழும்புத் துறைமுகத்தில் மாற்றுத் தளவாட மையமொன்றை அரச மற்றும் தனியார் பங்காளித்துவ (PPP) முறையின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதற்கான முதலீட்டாளர்கள் போட்டித்தன்மை வாய்ந்த கேள்விப்பத்திர நடைமுறையின் ஊடாகத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Related

Tags: bimal-rathnayakeColombo Portகொழும்பு துறைமுகத் திட்டம்பிமல் ரத்நாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

Next Post

துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

Related Posts

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!
இலங்கை

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

2026-10-21
அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் 1,454 கைதிகள்!
இலங்கை

அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் 1,454 கைதிகள்!

2026-10-21
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!
இலங்கை

நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை!

2026-10-21
சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

2026-10-21
சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-10-21
சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகம்

சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2026-10-21
Next Post
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

0
கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

0
வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

0
அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் 1,454 கைதிகள்!

அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் 1,454 கைதிகள்!

0
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை!

0
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

2026-10-21
கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

2026-10-21
வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

2026-10-21
பிரித்தானியாவின் டெலிவரி, அஞ்சல் சேவைகளிலும் பாதிப்பு!

பிரித்தானியாவின் டெலிவரி, அஞ்சல் சேவைகளிலும் பாதிப்பு!

2026-10-21
அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் 1,454 கைதிகள்!

அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் 1,454 கைதிகள்!

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: