சபரிமலையில் துலாம் மாதத்துக்காக (ஐப்பசி) கடந்த 17-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 18-ம் தேதி தொடங்கிய வழிபாடு இன்று (அக்.22) இரவு வரை நடைபெற உள்ளது. பின்பு ஹரிவராசனம் எனும் தாலாட்டுப் பாடலுடன் நடை அடைக்கப்படும். பின்பு நவ.6-ம் தேதி மாலை சித்திரை ஆட்டத் திருநாளுக்காக நடை திறக்கப்படும்.
ஒருநாள் வழிபாட்டுடன் நவ.7-ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். அதன் பின்பு மண்டல பூஜைக் காக நவ.16-ம் தேதி நடை திறக்கப்பட்டு தொடர் வழிபாடு நடைபெறும் .

















