இந்தோனேசியாவில் சுமத்ரா தீவுக்கு அருகே கப்பல் ஒன்றிலிருந்து சுமார் 2 தொன் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் இதுவென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து மாத கால கண்காணிப்பின் பின்னர், ‘Sea Dragon Tarawa’ என்ற கப்பலை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனையிட்டபோது பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல், மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் பகுதிகளை உள்ளடக்கிய ‘கோல்டன் ட்ரையாங்கிள்’ போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இந்தோனேசியர்கள் நால்வரும் தாய்லாந்து நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.















