கிங் கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்கின் நீரோந்துப் பகுதிகளில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிக மழை வீழ்ச்சு பதிவாகியுள்ளது.
நிலவும் மழை நிலைமைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் கிங் கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்கில் பராமரிக்கப்படும் ஆற்று நீர்மட்ட அளவீட்டு நிலையங்களில் பதிவாகும் நீர்மட்டங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தவளம, நாகொட பத்தேகம மற்றும் வெலிவிட்டிய-திவித்துர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கிங் கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த நிலைமை தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்கள் அப் பிரதேசங்கள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.













