குறிப்பாக, புகைப்பிடிக்காதவர்களுக்கும், பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
புகைப்பிடித்தல் மட்டுமன்றி, காற்று மாசுபாடு, பிறர் புகைப்பிடிப்பதால் ஏற்படும் புகைக்கு உள்ளாதல், வீட்டுக்குள் உருவாகும் புகை மற்றும் அஸ்பெஸ்டாஸ் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்களின் தாக்கம் ஆகியவையும் இந்நோய் ஏற்படுவதற்கான காரணிகளாக அமைவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதுடன், தூய்மையான காற்றோட்டம் உள்ள சூழலைப் பேணுவதும் அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதுடன், ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது உயிரிழப்புகளைத் தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்து புகைப்பிடிப்பவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்வது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

















