2026-2027ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை பருவம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதமலை ஆலயத்தின் தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகும் சிவனொளிபாதமலை யாத்திரை பருவம், 2027ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்துடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















