GTA 6 காணொளி விளையாட்டு, முன்பதிவுகள் மூலமாக மாத்திரம் 16 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி 1.54 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 1.23 பில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப வசூலைப் பெற்ற Avengers: Endgame திரைப்படத்தின் சாதனையை GTA 6 முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் பொழுதுபோக்குத் துறையின் வரலாற்றில் மிகப்பெரிய ஆரம்ப வருமானத்தைப் பதிவு செய்த படைப்பாக GTA 6 உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















