• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ரோஹிங்கியா மக்கள் மீதான 2017ஆம் ஆண்டு வன்முறை இனப்படுகொலை எனத் தீர்ப்பு!

2017 violence against the Rohingya people ruled to be genocide!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/20
in ஆசியா, உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியன்மார் முன்னெடுத்த கொடூரத் தாக்குதல்கள் இனப்படுகொலையா என்பது குறித்த மூன்று மணிநேர தீர்ப்பு வாசிப்பின் ஆரம்பத்திலேயே நீதிமன்றம் இந்த முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் கொண்ட குழாமின் தீர்ப்பை வாசித்த நீதிமன்றத் தலைவர் யூஜி இவாசாவா “ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா பொதுமக்களை மியன்மார் பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர்; பரவலான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான வன்முறைகளில் ஈடுபட்டதுடன், தப்பிச் சென்ற ரோஹிங்கியா மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

2017 ஆகஸ்ட் மாதம் வடக்கு ராகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப் பதிலடியாக ‘தூய்மைப்படுத்தும் நடவடிக்கை’ என்ற பெயரில் மியன்மார் இராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடான பங்களாதேஷிற்குத் தப்பிச் சென்றனர். எனினும், இது பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கை என மியன்மார் வாதிட்டு வந்தது.

இந்நிலையில், 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைத் தடுப்பு சாசனத்தை மியன்மார் மீறியுள்ளதாக அறிவிக்கக் கோரி, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆபிரிக்க நாடான காம்பியா 2019ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தது.
பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குதல், தாயகம் திரும்பும் உரிமை மற்றும் இழப்பீடுகளை வழங்குமாறு மியன்மாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் காம்பியா கோரியுள்ளது.

தற்போது சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷின் கொக்ஸ் பசார்  மாவட்டத்திலுள்ள நெரிசலான முகாம்களில் தீ விபத்து, தொற்றுநோய்கள், மண்சரிவு மற்றும் கடுமையான வேலைக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

“கடந்த 10 ஆண்டுகளாக ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ரோஹிங்கியா மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்; எமது சமூகத்திற்கான அங்கீகாரமும் கண்ணியமுமே எமது கோரிக்கை” என ரோஹிங்கியா மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் உல்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இறுதியானவை மற்றும் சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடியவை என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் நேரடி அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை; மீறல்கள் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மட்டுமே அறிவிக்க முடியும்.

சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் ஒரு நாட்டை நேரடியாக இனப்படுகொலைக்குப் பொறுப்பாக்கி வழங்கப்படும் முதல் தீர்ப்பு இதுவாகும்
முன்னதாக 2007ஆம் ஆண்டு பொஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிகா படுகொலை விவகாரத்தில் ‘இனப்படுகொலையைத் தடுக்கும் கடமையை மீறியதாக’ மட்டுமே சேர்பியா மீது தீர்ப்பளிக்கப்பட்டது

மேலும், காஸா போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராகத் தென்னாபிரிக்கா தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கு மற்றும் உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளிலும் இந்தத் தீர்ப்பு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

Tags: 2017 violence against the Rohingya people ruled to be genocide!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான்!

Next Post

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகளால் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Related Posts

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகளால்  வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இங்கிலாந்து

2026-11-20
பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே உறவுகளை மீண்டும் வலுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள்

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற  நிதியுதவி

உக்ரைனின் கிரிமியா மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு  ஆதரவாக வாக்களிக்க பிரித்தானியா  தீர்மானம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடர்ச்சியான மழையால் வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-11-19
உலகமே உற்று நோக்கும்  வல்லரசுத் தலைவர்களின் தொடர் சந்திப்புகள்!
அமொிக்கா

உலகமே உற்று நோக்கும் வல்லரசுத் தலைவர்களின் தொடர் சந்திப்புகள்!

2026-11-19
Next Post
பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகளால்  வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகளால் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகள் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகள் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

0
ரோஹிங்கியா மக்கள் மீதான 2017ஆம் ஆண்டு வன்முறை இனப்படுகொலை எனத் தீர்ப்பு!

ரோஹிங்கியா மக்கள் மீதான 2017ஆம் ஆண்டு வன்முறை இனப்படுகொலை எனத் தீர்ப்பு!

0
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான்!

0
பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே உறவுகளை மீண்டும் வலுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள்

பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே உறவுகளை மீண்டும் வலுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள்

0
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற  நிதியுதவி

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற நிதியுதவி

0
பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகள் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகள் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

2026-11-20
ரோஹிங்கியா மக்கள் மீதான 2017ஆம் ஆண்டு வன்முறை இனப்படுகொலை எனத் தீர்ப்பு!

ரோஹிங்கியா மக்கள் மீதான 2017ஆம் ஆண்டு வன்முறை இனப்படுகொலை எனத் தீர்ப்பு!

2026-11-20
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான்!

2026-11-20
பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே உறவுகளை மீண்டும் வலுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள்

பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே உறவுகளை மீண்டும் வலுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள்

2026-11-20
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற  நிதியுதவி

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற நிதியுதவி

2026-11-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: