கடந்த நான்கு ஆண்டுகளில் லண்டன் பெருநகரக் காவல் துறையைச் சேர்ந்த சுமார் 1,800 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஒழுக்கக்கேடு, மோசமான பணித்திறன், பாதுகாப்புப் பின்னணி சரிபார்ப்பில் தோல்வி மற்றும் பணிக்காலச் சோதனையில் தேர்ச்சி பெறாமை ஆகியவை இதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், பொலிஸ் படையில் முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பான உள்நாட்டுப் புகார்கள் 2023–24ஆம் ஆண்டில் 1,348 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகள் ஒரு சில அதிகாரிகளுடன் மட்டும் தொடர்புடையவை அல்ல எனவும், பொலிஸ் அமைப்பின் கலாசாரத்திலேயே மாற்றம் தேவை என துணை ஆணையர் மாட் ஜூக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் துறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும், தவறிழைக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















