• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இந்தியாவின் வெற்றி முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட நியூசிலாந்து!

இந்தியாவின் வெற்றி முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட நியூசிலாந்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/23
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வெலிங்டனில் ஒரு மறக்கமுடியாத வெற்றியைப் பெற இந்தியா மேற்கொண்ட முயற்சி, முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் வெளிப்படுத்திய அபாரமான உறுதியால், சமனில் முடிந்தது.

திங்களன்று காலை அமர்வில் டெவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தனர், ஆனால் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் உறுதியான பின்களப் போராட்டத்தை வழிநடத்தி இந்திய அணியை விரக்தியடையச் செய்தனர். 

Image

அன்ஷுல் கம்போஜும் விக்கெட் வீழ்த்தி இந்தியாவிற்கு நம்பிக்கையை அளித்தார், ஆனால் ஓவர்கள் குறையக் குறைய, இந்திய அணி தொடர்ந்து நிதானமாக ஆடி வந்தது. 

இறுதி ஒரு மணி நேரம் மீதமிருந்த நிலையில், ஷுப்மன் கில்லும் நியூசிலாந்து வீரர்களும் கைகுலுக்கி, போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த நியூஸிலாந்து அணி இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. 

இருப்பினும் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 118 ஓட்டங்கள் விளாசினார். 

ஏனைய வீரர்கள் பெரிய அளவில் ஓட்டங்கள் எடுக்காததால் நியூசிலாந்து அணி 368 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ஓட்டங்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி 136 ஓட்டங்கள் குவித்தார். தேவ்தத் படிக்கல் 80 ஓட்டங்கள் எடுத்தார்.

அதேபோல், அணித் தலைவர் சுப்மன் கில் 98 ஓட்டங்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். 

அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 153 பந்துகளில் 128 ஓட்டங்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடங்கும்.

தொடர்ந்து துருவ் ஜூரெல் 78 ஒட்டங்களும், அன்ஷுல் காம்போஜ் 38 ஓட்டங்களும் எடுத்தனர். 

இதனால் இந்திய அணி 166 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 720 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 352 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தனர். 

தொடக்க வீரர் டாம் லாதம் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து ஹென்றி நிக்கோல்ஸ் 31 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். டெவான் கான்வே சிறப்பாக விளையாடி 65 ஓட்டங்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 37 ஓட்டங்கள் எடுத்தார். 

இதனால் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தாலும் ஆட்டத்தை இழக்காமல் தொடர்ந்து போராடியது.

இந்திய அணியின் சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, வொஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றிபெற நியூசிலாந்தின் எஞ்சிய விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டிய நிலை இருந்தது. 

இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர்.ஆனால், டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி இந்திய அணியின் வெற்றி முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர். 

இருவரும் கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்றனர்.

இதனால் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 239  ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது. 

டேரில் மிட்செல் 49 ஓட்டங்களுடனும், கிளென் பிலிப்ஸ் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

முதல் இன்னிங்சில் 720 ஒட்டங்கள் குவித்து, 352 ஓட்டங்கள் முன்னிலை பெற்றும் இந்திய அணியால் வெற்றியைப் பெற முடியவில்லை. 

கடைசி நாளில் நியூசிலாந்து அணியின் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்க முடியும். 

ஆனால் நியூசிலாந்து வீரர்களின் நிதானமான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்தது. 

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்க உள்ளது. 

Image

Related

Tags: INDIANew Zealandஇந்தியாடெஸ்ட்நியூஸிலாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களனிப் பாலம் – துறைமுக அணுகல் மேம்பால இணைப்புப் பணிகள்: இங்குருகட வழியில் தற்காலிக மூடல்

Related Posts

லிபியத் துறைமுகத்தில் ரஷ்யப் போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரேன்!
ஆசிரியர் தெரிவு

லிபியத் துறைமுகத்தில் ரஷ்யப் போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரேன்!

2026-11-23
இந்தியா – நேபாளம் இடையே புதிய ரயில் சேவை ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா – நேபாளம் இடையே புதிய ரயில் சேவை ஆரம்பம்!

2026-11-23
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-11-23
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு!
இலங்கை

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு!

2026-11-23
ட்ரம்பின் உத்தரவால் ஆசிய சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

2026-11-23
பொருளாதார மத்திய நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன
இலங்கை

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

2026-11-23

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
இந்தியாவின் வெற்றி முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட நியூசிலாந்து!

இந்தியாவின் வெற்றி முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட நியூசிலாந்து!

0
களனிப் பாலம் – துறைமுக அணுகல் மேம்பால இணைப்புப் பணிகள்: இங்குருகட வழியில் தற்காலிக மூடல்

களனிப் பாலம் – துறைமுக அணுகல் மேம்பால இணைப்புப் பணிகள்: இங்குருகட வழியில் தற்காலிக மூடல்

0
பங்களாதேஷில் தட்டம்மை பரவல் தீவிரம் – 2026இல் இதுவரை 1,352 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் தட்டம்மை பரவல் தீவிரம் – 2026இல் இதுவரை 1,352 பேர் உயிரிழப்பு!

0
லிபியத் துறைமுகத்தில் ரஷ்யப் போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரேன்!

லிபியத் துறைமுகத்தில் ரஷ்யப் போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரேன்!

0
அமெரிக்காவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கண்டறியப்பட்ட அரிய வகை மின்மினிப் பூச்சி

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: