ஆர்.மனோ
பிரித்தானியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் குளிர்காலத்தின் இயல்பு படிப்படியாக மாறி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் பிரித்தானியாவின் குளிர்கால வெப்பநிலை முந்தைய காலகட்டங்களை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது.
1961 முதல் 1990 வரை ஒரு குளிர்காலத்தில் சராசரியாக 38 நாட்கள் உறைபனி காணப்பட்ட நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் அது சுமார் 28 நாட்களாகக் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், பிரித்தானியாவின் உறைபனி நாட்களின் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பிரித்தானியாவின் குளிர்காலங்களில் மழைப்பொழிவு அதிகரித்து வருவதுடன், வெள்ளப்பெருக்கு அபாயமும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தில் 25 டிகிரி செல்சியஸைத் தாண்டும் நாட்களின் எண்ணிக்கையும் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் பிரித்தானியாவில் ஆண்டுக்கு சராசரியாக 25 டிகிரி செல்சியஸைத் தாண்டும் கோடை நாட்கள் சுமார் ஒன்பது நாட்களாக அதிகரித்துள்ளன.
இந்த காலநிலை மாற்றங்கள் விவசாயம், நீர்வள முகாமைத்துவம் , சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பிரித்தானியாவின் பருவகால மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, எதிர்கால காலநிலை அபாயங்களுக்கு நாடு தயாராக வேண்டும் என வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.














