ஆர்.மனோ
பிரித்தானியாவில் குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நிலுவையில் உள்ள நூற்றுக்கணக்கான வழக்குகள் 2030ஆம் ஆண்டு வரையிலும் விசாரணைக்கு வராமல் தாமதமடையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்றவியல் வழக்குகள் நீண்டகாலமாக விசாரணைக்காகக் காத்திருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் விசாரணைக்கான போதிய வசதிகள் இல்லாமை ஆகியவை இந்தத் தாமதங்களுக்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்நிலையை மாற்ற நீதிமன்றங்களின் செயல்திறனை அதிகரித்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது















