தொழில்முறை மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் (Bronson Reed) தனது 38 ஆவது வயதில் காலமானார் என உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனம் (WWE) அறிவித்துள்ளது.
அந்த மல்யுத்த வீரர் (அவரது உண்மையான பெயர் ஜெர்மைன் ஹேலி)மருத்துவச் சிக்கல்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (27) காலமானார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இது குறித்த கூடுதல் விவரங்களை அது வெளியிடவில்லை.
அதேநேரம், உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரரின் குடும்பத்தினருக்கும், அவரது கர்ப்பிணி மனைவி பெய்க் மற்றும் அவர்களது மகளுக்கும் WWE நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
ஹேலி ஆரம்பத்தில் ஜோனா ரொக் மற்றும் ஜே-ரொக் என்ற பெயர்களில் சுயாதீன மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றார், பின்னர் 2019-ல் WWE-ல் கையெழுத்திட்டார்.
2021-ல் அவர் விடுவிக்கப்பட்டார், பின்னர் ஓராண்டு கழித்து மீண்டும் திரும்பி வந்து, தனது மரணம் வரை WWE-ல் தொடர்ந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 40 வயதில் காலமான இங்கிலாந்து மல்யுத்த நட்சத்திரமான பெஞ்சமின் சாட்டர்லிக்குப் பிறகு, கடந்த சில மாதங்களில் இறந்த இரண்டாவது மல்யுத்த வீரர் ஹேலி ஆவார்.















