எஸ் .ஹரியதர்ஷனி
பாடசாலைகளில் காய்ச்சல் தடுப்பூசியைத் தவறவிட்ட மாணவர்கள் , மருந்தகங்கள் ஊடாக அதைப் பெற்றுக்கொள்ளலாம் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் , தங்கள் பிள்ளைகளுக்குக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யுமாறு தேசிய சுகாதார சேவை பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளது .
இங்கிலாந்து முழுவதும் உள்ள 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருந்தகங்கள் சந்திப்பு நேரங்களை வழங்குகின்றன. எனவும் தேசிய சுகாதார சேவை செயலி அல்லது NHS Find a Pharmacy வலைப்பக்கம் ஊடாக திங்கட்கிழமை முதல் முன்பதிவுகள் தொடங்குகின்றன எனவும் செவ்வாய்க்கிழமை முதல் சந்திப்பு நேரங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குக் காய்ச்சலால் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படலாம் எனவும் அவர்களால் முதியவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கும் அதனை எளிதாகப் பரப்ப முடியும் எனவும் தேசிய சுகாதார சேவை குறிப்பிட்டுள்ளது .
தங்கள் பிள்ளை பாடசாலையில் தடுப்பூசியைத் தவறவிட்டிருந்தால், உள்ளூர் மருந்தகத்தில் அவர்களுக்கான காய்ச்சல் தடுப்பூசியை முன்பதிவு செய்வது பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ பணிப்பாளர் பேராசிரியர் ஃபிராங்கி ஸ்வோர்ட்ஸ் ( Frankie Swords ) தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் போன்ற குளிர்கால வைரஸ்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன எனவும் இது தேசிய சுகாதார சேவை மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இத்திட்டம் , குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை நோயில் இருந்து பாதுகாப்பதற்கான மற்றொரு வழி எனவும் தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ பணிப்பாளர் பேராசிரியர் ஃபிராங்கி ஸ்வோர்ட்ஸ் ( Frankie Swords ) குறிப்பிட்டுள்ளார் .













