மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும் மக்கள்!
மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும் மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்தும் அதற்கான தீர்வுகள் இன்றுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கழிவகற்றல் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வரை ஒரு முறையான கழிவகற்றல் திட்டம் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு பிரதேச சபை ஊடாக கழிவுகள் சேகரிக்கப்படுகின்ற போதும் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த கழிவுகளையும் மீள் சுழற்சி செய்து முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான இடமோ அல்லது ஒரு செயற்றிட்டமோ இதுவரை உருவாக்கப்படவில்லை. காலத்திற்கு காலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கும் அவற்றில் இருந்து பசளை தயாரிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் கூட்டங்கள் நடைபெற்ற போதும் இதுவரை ஒரு உருப்படியான திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. இயற்கை வளங்களால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் பசுமை தாயகமாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டம் அதன் கடல் வளம்இ உப்பாறுஇ நன்னீர் வாவிகள் மற்றும் நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வாழ்வாதார அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு கிடைக்கும் மீன்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அரிய இயற்கை வளங்கள் அனைத்தும் குப்பைகள்இ பிளாஸ்டிக் கழிவுகள், இரசாயன கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நீரியல் உயிரினங்கள் மட்டுமன்றி மனித சுகாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும் மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும் நிலையான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்தார்
Read moreDetails










