ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – 100 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வரும் இராணுவம் மற்றும் பொலிஸாரைக் கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) காலை குறித்த பகுதியில் தலிபான்கள் கார் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டனர்.
இதன்போது ஆரம்பத்தில் 18 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எனினும் தற்போது 100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.