வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் எட்மண்டோ கோன்சாலஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் குறித்த முடிவுகளை எதிர்க்கட்சி ஏற்க மறுத்ததையடுத்து எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் எட்மண்டோ கோன்சாலஸ் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் ஸ்பெயினிடம் அரசியல் தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன