கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மொடர்னா இன்க் மற்றும் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொவிட் -19 தடுப்பூசிகளின் அளவுகளுக்கான ஒப்பந்தங்களை கொலம்பியா எட்டியுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான கொலம்பியா, சுமார் 34 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதாக நம்புகிறது.
தற்போது வரை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மூலமும் உள்நாட்டுத் தயாரிப்பின் மூலமும் பெறப்பட்ட 35 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் எஸ்.இ மற்றும் அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி ஆகியோரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஒவ்வொன்றும் 10 மில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை கொலம்பியா முன்பு அறிவித்தது.
அத்துடன் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் மருந்துப் பிரிவான ஜோன்சென் உருவாக்கிய தடுப்பூசியின் 9 மில்லியன் டோஸ்கள். இது உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் கோவாக்ஸ் பொறிமுறையின் மூலம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.