மியன்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.
நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இராணுவம், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே மியன்மரில் ரஇhணுவப்புரட்சி குறித்து அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
மியன்மர் இராணுவம், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என இந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில், தளபதி மின் ஆங் ஹ்லேங்கிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக மியன்மர் இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகரான நேபியேட்டோ மற்றும் முக்கிய நகரமான யாங்கூனின் தெருக்களில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியன்மர் நாடாளுமன்றத்தின் கீழவை, இன்று கூட இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டு இராணுவம் தலையிட்டு அக்கூட்டத்தை ஒத்திவைக்க அழைப்புவிடுத்திருக்கிறது.