11 நாடுகளின் டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக முகாமான விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (சிபிடிபிபி) இல் சேர பிரித்தானியா விண்ணப்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஒரு வருடம் கழித்து பிரித்தானிய மக்களுக்கு மகத்தான பொருளாதார நன்மைகளைத் தரும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் தடையற்ற வர்த்தகப் பகுதியில் சேருவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, ஆழ்ந்த அரசியல் ஒருங்கிணைப்பு இல்லாமல் குறைந்த கட்டணங்களிலிருந்து பிரித்தானியா பயனடைகிறது.
சிபிடிபிபி உறுப்பினர்களுடனான பிரித்தானியாவின் வர்த்தகம் 2019ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 111 பில்லியன் பவுண்டுகள் (சுமார் 152 பில்லியன் டொலர், 125 பில்லியன் யூரோக்கள்) ஆகும், இது இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தும் வணிகத்தை விட ஆறு மடங்கு குறைவாகும்.
கூட்டாண்மைடன் சேருவது ஜப்பான், நியூசிலாந்து மற்றும் மெக்ஸிகோ, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களை உள்ளடக்கிய உறுப்பினர்களிடையே வர்த்தகம் செய்யப்படும் 95 சதவீத பொருட்களுக்கான கட்டணங்களை நீக்கும் என்று லண்டன் கூறியது.
பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக செயலாளர் லிஸ் ட்ரஸ், இன்று (திங்கட்கிழமை) ஜப்பான் மற்றும் நியூஸிலாந்தில் உள்ள அதிகாரிகளுடன் பேசும்போது முறையான கோரிக்கையை முன்வைப்பார். இந்த ஆண்டு இறுதியில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிபிடிபிபி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளிடையே வர்த்தக தடைகளை நீக்குகிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் அமெரிக்காவும் ஒருவராக இருந்த போதிலும், டரம்ப் நிர்வாகம் இந்த கூட்டணியில் இருந்து 2017இல் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் விலகியது.
11 நாடுகள் அடங்கிய, சி.பி.ஐ.பி.பி., எனப்படும், டிரான்ஸ் பசிபிக் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் அவுஸ்ரேலியா, புருனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன.