கண்டி, பல்லேகல பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சோதனையில், வாகனம் பதிவு செய்யப்படாதது, அதன் சேஸ் மற்றும் என்ஜின் இலக்கங்கள் இரண்டும் காணாமல் போனது, இது சட்டவிரோதமாக பொருத்தப்பட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் வாகனத்தை வைத்திருந்த 48 வயதுடைய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.