குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் ஐந்தாயிரத்து 27பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 49ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில், இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 32ஆயிரத்து 426பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 336பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 29பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்து 923பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 113பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 24ஆயிரத்து 475பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.