இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட இருந்த இந்த ஒப்பந்தம் தற்போது முழுமை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்தப் போர்விமானங்களைக் கட்டமைக்கும் னுயளளயரடவ நிறுவனத்திற்கு மட்டுமல்லாது, அவர்களுடன் இணைந்து பணியாற்றும் 500 சிறுநிறுவனங்களிற்கும் இலாபகரமானது என பிரான்சின் இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்சிற்கும் இந்தோனேசியாவிற்குமான இராணுவ ஆயுத ஒப்ந்தங்கள் உள்ளன. 2010ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டிற்குள் மட்டும் 1.6 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஆயுதங்கள் பிரான்ஸினால் இந்தோனேசியாவிற்கு விற்கப்பட்டமை குறிப்படத்தக்கது.
முன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்- 18 ரபேல் விமானங்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.