அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால், முப்பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.
சுவான் நகரம் மற்றும் முன்டரிங், சிட்டரிங், நார்தாம் ஆகிய பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் காட்டுப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், காட்டுத்தீ பரவும் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.