தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை கடுமையாக குறைக்க வேண்டுமென சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
பயணத்துடன் எந்த தொடர்பும் இல்லாத தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர், அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தென்னாபிரிக்க மாறுபாடு இன்னும் கடுமையானது. ஆனால் நாங்கள் அதைக் கடுமையாகக் குறைக்க வேண்டும், நாங்கள் செய்வோம் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறினார்.
பிரித்தானியாவில் சுமார் 80,000 பேருக்கு இந்த மாறுபாட்டிற்கான அவசர சோதனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ரே, லண்டன், கென்ட், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், சவுத்போர்ட் மற்றும் வால்சால் ஆகிய எட்டு பகுதிகளில் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் சோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.