ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசி 92 வீத செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The Lancet சர்வதேச மருத்துவ சஞ்சிகை இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி மீதான இறுதிக்கட்ட பரிசோதனைகளின் மூலம் இந்த முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என The Lancet சர்வதேச மருத்துவ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், Sputnik V கொரோனா தடுப்பூசி மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.