அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் நிலையில் புதிதாக பொறுப்பேற்ற ஜோ பைடன் அரசுடன் 5 ஆண்டுகளுக்கு ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நீட்டித்து அதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையெழுத்திட்டார்.
ஸ்டார்ட் திட்டம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று இருநாடுகளும் உறுதியேற்பு தொடர்புடையதாகும்.
பெப்ரவரி 5ஆம் திகதியுடன் காலாவதியாகும் இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான முதல் அடியை ஜோ பைடன் அரசு எடுத்து வைத்தது என்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆன்டனி பிளிங்கின் தெரிவித்துள்ளார்.