ரி-10 லீக் தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும், நோதர்ன் வோரியஸ் அணியும் மோதவுள்ளன.
முதல்முறையாக டெல்லி புல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நோதர்ன் வோரியஸ் அணி இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளது.
ஆகவே டெல்லி அணி முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தை வெல்லும் முனைப்பிலும், நோதர்ன் அணி இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்திலும் உள்ளன. முன்னதாக 2018ஆம் ஆண்டு நோதர்ன் அணி சம்பியன் பட்டம் வென்றது.
நேற்று நடைபெற்ற முதலாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும், நோதர்ன் வோரியஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
எனினும், புள்ளிகளின் அடிப்படையில் இரு அணிகளும் அடுத்தடுத்து இருந்தமையினால், இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.