பங்களாதேஷில் நாடுமுழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகள், ஆரம்பமாகியுள்ளன.
முதல் மாதத்தில் சுமார் 35 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இதுவரை 3,28,000பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை பெற பங்களாதேஷ் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக தற்போது 50 இலட்சம் தடுப்பூசிகள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசாங்கம் சார்பில் பங்களாதேஷிற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.