பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 19ஆயிரத்து 114பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,014பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 39இலட்சத்து 45ஆயிரத்து 680பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 465பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19இலட்சத்து 15ஆயிரத்து 629பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 505பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 19இலட்சத்து 15ஆயிரத்து 629பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.