கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3,203பேர் பாதிக்கப்பட்டதோடு 65பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து நான்காயிரத்து 260பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 20ஆயிரத்து 767பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 44ஆயிரத்து 727பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 736பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஏழு இலட்சத்து 38ஆயிரத்து 766பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.