பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது.
கல்வி பயிலும் இடங்களில் கொரோனத் தொற்றுப் பரவலைத் தடுக்கவும், முக்கியமாக பிரித்தானிய வைரஸின் (VOC-202012/01) இன் பரவவலைத் தடுக்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கழுவிப்பாவிக்கக்கூடிய முதலாம் தர முகக்கவசம், அல்லது மருத்துவ முகக்கவசம் மற்றும் மிகவும் பாதுகாப்பான FFP2 முகக்கவசங்கள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய முகக்கவசங்களை அணியாமல் வருபவர்களிற்கு ஏதும் தண்டனை நடவடிக்கை உள்ளதா என்பது அறியத்தரப்படவில்லை.
ஆனால், இப்படியான முககக்சவங்களை அணிவதே தற்போதைய மோசமான பரவலைத் தடுக்க உதவும். பல பாடசலைகள் இத்தகைய முக்கவசங்களை மாணவர்களிற்கு வழங்கவும் உள்ளன.