மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
சட்டோகிராமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், தனது இடது தொடையில் காயத்துக்குள்ளான ஷகிப் அல் ஹசன், தற்போது காயத்திலிருந்து மீளவில்லை என்பதால் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டை ஷகிப் அல் ஹசன் தவறவிடுவார் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஷகிப் இந்த வாரம் அணியின் உயிர் பாதுகாப்பு குமிழியை விட்டு வெளியேறுவார். அவர் தொடர்ந்து உடல் ரீதியான வலிமையை மீட்டு பலப்படுத்துவதால் டாக்காவில் உள்ள பிசிபி மருத்துவத்தின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் இருப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை மறுதினம் மிர்பூரில் உள்ள ஷெர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் டெஸ்டில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.