உலக நாடுகளில், மிகப் பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இதுவரை 77 நாடுகளில் 172 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
உலகில், நாள்தோறும் 6 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்படும் நிலையில் இந்த நடவடிக்கை தொடர்ந்தாள் உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இரண்டு முறை தடுப்பூசிகளைப் போட்டு முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 50 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கையை விட தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகம் என அங்குள்ள தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.