கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த பல நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில், இலங்கையிலும் தடுப்பூசி பாவனையை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
வேறு சில நாடுகளில் இரத்த உறைவு காரணமாக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்ற சிலரின் மரணம் தொடர்பான சந்தேகங்களை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சுமார் 02-03 நாட்களுக்குப் பிறகு, கம்பஹாவில் பதிவான இரண்டு இறப்புகளைப் பற்றி கருத்து தெரிவித்த அவர், இருதயம் சம்பந்தப்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.