தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ உடனடியாக பதவி விலகத் தேவையில்லை என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘ஆண்ட்ரூ குவோமோ மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த விசாரணையின் முடிவுகள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதுவரை அவர் மேயர் பதவியை தொடர்ந்து வகிக்கலாம்’ என கூறினார்.
ஆண்ட்ரூ குவோமோ தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளர்கள் அடுத்தடுத்து பாலியல் புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா ருச் என்ற பெண், அனா லிஸ் என்ற 35 வயதுப் பெண் உட்பட பலi; ஆண்ட்ரூ குவோமோ மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தின் செனட் பெரும்பான்மை தலைவர் சர் ஷுமர் மற்றும் செனட் உறுப்பினர் கிறிஸ்டன் கில்லிபிராண்ட் அவர் சார்ந்துள்ள பெரும்பாலான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க்ள வலியுறுத்தி வருகின்றனர்.