கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் பகுதியில் கையகப்படுத்தப்பட்டிருந்த காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 133 ஏக்கர் காணியே இவ்வாறு மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கையளிப்பு நிகழ்வு, பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஜெயபுரம் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு காணியை மீள வழங்குவதற்கான சான்றிதழ்களை உரிமையாளர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட காணி பதில் அரசாங்க அதிபர், குறித்த பகுதியின் கிராம சேவையாளர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.