நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் குறித்த மனு விசாரணைக்கு வந்தபோதே அதனை நிராகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தற்போது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.