முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி உள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) முற்பகல் முன்னிலையாகிய அவர்களிடம் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர் சுஜீவ கமகே, (வயது 62) குழுவொன்றினால் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே ராஜித சேனாரத்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.