பிரித்தானியாவில் இருந்து 16 குடியேறியவர்களை சட்டவிரோதமாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் ஒரு லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சர்ரேயில் உள்ள எம்-25 மற்றும் ஏ-3 சந்திப்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 15:30 மணிக்கு இந்த 16 குடியேறிகள் மீட்கப்பட்டனர்.
மொராக்கோ, அல்ஜீரிய மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் உள்ளிட்ட புலம்பெயர்ந்தோர், குடியேற்ற குற்றங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
36 வயதான துருக்கிய ஓட்டுநர், அவர்களை கால்வாய் துறைமுகங்கள் வழியாக நாட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.