அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இணைந்தே பயணிக்க வேண்டும். மாறாக தான்தோன்றிதனமாக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் யுத்தம் தொடர்பாக 25 வீதம் மாத்திரமே காணப்படுகின்றன.
ஏனைய 75 வீதமானவை சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை, மாகாண சபைத் தேர்தல், ஜனநாயகம், நீதிமன்ற சுயாதீனத்தன்மை ஆகியவை தொடர்பானவைகளாகும்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையினுடைய சாசனத்தில் கையொப்பமிட்டிருந்தால், அதற்கு ஏற்றவாறே செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அதனைவிடுத்து, அரசாங்கம் தனது விருப்பத்துக்கு ஏற்ப செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.