ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே வெடித்த எரிமலை, தற்போது சுற்றுலா தளமாக மாறி வருகின்றது.
ஃபக்ரடால்ஸ்ஜால் என்ற எரிமலை வார இறுதியில் வெடித்ததையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். 800 ஆண்டுகளில் எரிமலை வெடித்த முதல் தடவையாகும்.
ஆயிரக்கணக்கான நில அதிர்வுகளுடன் வெடித்துள்ள எரிமலையிலிருந்து லாவா எனப்படும் நெருப்புக் குழம்புகள் ஆறாக ஓடி வருகின்றன.
இந்த தளத்திற்குள் நுழைய ஆரம்பத்தில் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், சனிக்கிழமை பிற்பகல் முதல் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது பல வாரங்களாக ஐஸ்லாந்தர்கள் எதிர்பார்த்த ஒரு வெடிப்பாக இது அமைந்துள்ள போதும், இதனால் அதிர்ஷ்டவசமாக, யாரும் காயமடையவில்லை.