இராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தடுப்பூசிகள் போடுவதற்காக மேலதிகமாக சிறப்பு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோருக்கு தடுப்பூசிகளை விரைவாக போட்டுக்கொள்ளும் நோக்கத்தோடு, குறைந்தது 35 கொரோனா தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும்.
ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த நிலையங்களில் தடுப்பூசிகள் போடப்படும். முதல்கட்டமாக இந்த நிலையங்களூடாக இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் என மொத்தம் 1.9 மில்லியன் அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடப்படும்’ என கூறினார்.
இதனிடையே வயது வரம்பை மீறி, தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கோரிக்கை முன்வைத்துள்ளார்.