வட மாகாணத்தில் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒருங்கிணைப்பதனை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண கல்வித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.