உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை,12.60 கோடியை கடந்துள்ளது.
அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் காணப்படுகின்றன.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 10.16 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை குறித்த தொற்றினால் இதுவரை 27.66 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 2.15 கோடிக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.